பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், விபத்தில் பலியானவருக்கு இழப்பீடு வழங்காததால், அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.ஓசூர், காளேஸ்வரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் கஜபதி, 60. நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த, 2015 நவ., 29ல், ஓசூர் - பாகலூர் சாலையில் காரில் சென்றபோது, பின்னால் வந்த அரசு விரைவு பஸ், கார் மீது மோதியது. இதில் கஜபதி உயிரிழந்தார். அவரது மனைவி ஜெயா, 52,

ஓசூர்: ஓசூரில், விபத்தில் பலியானவருக்கு இழப்பீடு வழங்காததால், அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
ஓசூர், காளேஸ்வரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் கஜபதி, 60. நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த, 2015 நவ., 29ல், ஓசூர் - பாகலூர் சாலையில் காரில் சென்றபோது, பின்னால் வந்த அரசு விரைவு பஸ், கார் மீது மோதியது. இதில் கஜபதி உயிரிழந்தார். அவரது மனைவி ஜெயா, 52, மகள்கள் மீனாகுமாரி, 38, பிரியா நாயுடு, 34, டீனா, 28, ஆகியோர், ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், இழப்பீடு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த, 2018ல், 7.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால், அரசு விரைவு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதனால், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்ய நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற அமீனாக்கள் சாந்தி, விமலா, சாந்தி ஆகியோர், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்தனர். ஒரு வாரகாலத்தில், வட்டியுடன் சேர்த்து, 11.25 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் நீதிமன்றத்தில் உறுதியளித்ததால், ஜப்தி செய்த பஸ்சை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X