பொது செய்தி

இந்தியா

66 லட்சம் வழக்குகள் : 2020ல் 'புதிய சாதனை'

Updated : செப் 17, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :கடந்த 2020ம் ஆண்டில், நாடு முழுதும் திருட்டு, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்தன.அதே நேரத்தில், கொரோனா விதிகளை மீறிய வழக்குகள் அதிகமாக இருந்ததாக, தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2020ம் ஆண்டில் நடந்த குற்றங்கள் தொடர்பாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில்
 66 லட்சம் வழக்குகள்    2020ல் 'புதிய சாதனை'

புதுடில்லி :கடந்த 2020ம் ஆண்டில், நாடு முழுதும் திருட்டு, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்தன.அதே நேரத்தில், கொரோனா விதிகளை மீறிய வழக்குகள் அதிகமாக இருந்ததாக, தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2020ம் ஆண்டில் நடந்த குற்றங்கள் தொடர்பாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2020ல், நாடு முழுதும் 66 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாயின. இது முந்தைய ஆண்டைவிட 28 சதவீதம் அதிகமாகும்.பதிவான மொத்த வழக்குகளில் 64.4 சதவீதம், ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டத்துக்கு உட்பட்டவை. அதே நேரத்தில் 35.7 சதவீதம், சிறப்பு மற்றும் உள்ளூர் சட்ட வழக்குகள்.

முந்தைய ஆண்டைவிட, கொரோனா விதிகளை மீறிய வழக்குகள் அதிகம் பதிவானதே, வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.கொரோனா விதிமீறல் தொடர்பாக 2020ல் மட்டும் 16.43 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நாடு முழுதும் 29 ஆயிரத்து 193 கொலை வழக்கு கள்; 84 ஆயிரத்து 805 ஆள் கடத்தல் வழக்குகள்; 3.71 லட்சம் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்கு கள் பதிவாயின.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-செப்-202105:09:05 IST Report Abuse
Kasimani Baskaran வீட்டை விட்டு வெளியே நடமாடினால்த்தான் வெட்டி வழக்குப்போட நேரமிருக்கும். வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தால் எப்படி சாத்தியம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X