சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வசீம் அக்ரம் கொலையில் தஞ்சையில் 6 பேர் சரண்

Added : செப் 15, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்: மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலர் கொலை வழக்கில் தேடப்பட்ட ஆறு பேர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம், 40; மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலராக இருந்தார். கடந்த 10ம் தேதி இரவு, அவரை காரில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை

தஞ்சாவூர்: மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலர் கொலை வழக்கில் தேடப்பட்ட ஆறு பேர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம், 40; மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலராக இருந்தார். கடந்த 10ம் தேதி இரவு, அவரை காரில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த ரவி, 23; தில்லிகுமார், 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா வியாபாரி இம்தியாஸ் குறித்து, போலீசாருக்கு வசீம் அக்ரம் தகவல் கொடுத்ததால், கொலை செய்தது தெரிந்தது. போலீசாரால் தேடப்பட்டு வந்த, காஞ்சிபுரம் மாவட்டம், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின், 19, சத்தியசீலன், 20, வண்டலூர் ஓட்டேரியைச் சேர்ந்த பிரவீன்குமார், 20, முனீஸ்வரன், 20, செல்வகுமார், 21, ஊரப்பாக்கம் அஜய், 21, ஆகியோர் தஞ்சாவூர் ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 3ல், நீதிபதி பாரதி முன் நேற்று சரணடைந்தனர். அவர்களை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X