பொது செய்தி

தமிழ்நாடு

உலக சாம்பியன்ஷிப் போட்டி வாய்ப்பு: பறிகொடுத்த தஞ்சை வீராங்கனை

Added : செப் 15, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்: 'கத்தார் ஏர்வேஸ்' விமான நிறுவன பணியாளர்கள் ஏற்படுத்திய குழப்பத்தால், தஞ்சையைச் சேர்ந்த வீராங்கனை, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியாமல், வேதனையோடு திரும்பியுள்ளார்.உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதித் தேர்வு, ஆக., 11ல் சண்டிகரில் நடந்தது. இத்தாலியில் 16 நாடுகள் பங்கேற்கும் போட்டிக்கு, பெண்கள் அணியில் 10 பேரும், ஆண்கள் அணியில் 16 பேரும்

தஞ்சாவூர்: 'கத்தார் ஏர்வேஸ்' விமான நிறுவன பணியாளர்கள் ஏற்படுத்திய குழப்பத்தால், தஞ்சையைச் சேர்ந்த வீராங்கனை, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியாமல், வேதனையோடு திரும்பியுள்ளார்.
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதித் தேர்வு, ஆக., 11ல் சண்டிகரில் நடந்தது. இத்தாலியில் 16 நாடுகள் பங்கேற்கும் போட்டிக்கு, பெண்கள் அணியில் 10 பேரும், ஆண்கள் அணியில் 16 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். தஞ்சாவூர், பொதுப்பணித் துறை நகரைச் சேர்ந்த, தமிழக ஹாக்கி அணியின் முன்னாள் வீரரான பாஸ்கரன், ஆசிரியை ராணி தம்பதியின் மகள் பூர்ணிஷா, 16 பெண்கள் அணியில் தேர்வானார். மகளிர் அணியினர் அனைவருக்கும் விசா கிடைத்த நிலையில், பூர்ணிஷாவுக்கு செப்., 9ல் தான் விசா கிடைத்தது. அதன்பின், மும்பை விமான நிலையத்துக்கு சென்று, கொரோனா பரிசோதனை உள்ளிட்டவற்றை முடித்து, விளையாட்டு போட்டியில் பங்கேற்க, இத்தாலிக்கு செல்லும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தார். விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், 'இத்தாலி நாட்டின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை' எனக் கூறிய கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவன பணியாளர்கள், அவரது பயணத்தை ரத்து செய்து, திருப்பி அனுப்பினர்.

பூர்ணிஷா கூறியதாவது: தஞ்சாவூர், திருச்சி போன்ற இடங்களில் 11 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டேன். விசா கிடைக்க தாமதமானதால், சென்னை, டில்லி, மும்பை போன்ற இடங்களுக்கு 10 முறை அலைந்து, மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் போராடி, விசாவை பெற்றோம். பின், 1.40 லட்சம் ரூபாய் செலவில், டிக்கெட் பதிவு செய்து, மும்பை விமான நிலையம் சென்ற போது, இத்தாலி நாட்டின் மருத்துவ சான்றிதழ் இல்லை எனக் கூறி, என் பயணத்தை ரத்து செய்து விட்டனர். ஏற்கனவே இத்தாலி நாட்டின் மருத்துவ சான்று இல்லாமல், மற்ற வீரர்கள் சென்றதாகவும், அந்த சான்று தேவையில்லை என்றும், இத்தாலி குடியுரிமை அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் எடுத்துக் கூறியும், அவர்கள் ஏற்கவில்லை. விமான நிறுவன பணியாளர்கள், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் என் கனவை சிதைத்து விட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X