சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிப்பர் லாரியில் சிக்கி கொண்ட டிரைவர்; 3 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது, மற்றொரு டிப்பர் லாரி மோதியது. அதில் சிக்கிய டிரைவர் மூன்று மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம், டி. கூடலூரைச் சேர்ந்தவர் சுப்பாராம், 60; டிரைவர். இவர் நேற்று காலை, 6:00 மணியளவில் க.பரமத்தியிலிருந்து டிப்பர் லாரியில், சிமென்ட் கலவையை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூருக்கு புறப்பட்டார். கரூர்-திருச்சி

கரூர்: கரூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது, மற்றொரு டிப்பர் லாரி மோதியது. அதில் சிக்கிய டிரைவர் மூன்று மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், டி. கூடலூரைச் சேர்ந்தவர் சுப்பாராம், 60; டிரைவர். இவர் நேற்று காலை, 6:00 மணியளவில் க.பரமத்தியிலிருந்து டிப்பர் லாரியில், சிமென்ட் கலவையை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூருக்கு புறப்பட்டார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உப்பிடமங்கலம் பகுதியில், டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அங்கு ஏற்கனவே பழுதாகி நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மற்றொரு டிப்பர் லாரி மீது சுப்பாராம் ஓட்டிச் சென்ற லாரி மோதியது. அதில் லாரிக்குள் சிக்கிகொண்டு சுப்பாராம் வலியால் துடித்தார். தகவலறிந்த, கரூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மூன்று மணி நேரம் போராடி சுப்பாராமை உயிருடன் மீட்டனர். பிறகு கரூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மறுபக்கம் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X