பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைத்தது எப்படி?

Added : செப் 15, 2021
Share
Advertisement
ராசிபுரம்: ராஜ்யசபா எம்.பி., - தி.மு.க., வேட்பாளராக, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்ட நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி காலத்தில் அவர்களோடு நெருங்கி பழகிய கே.ஆர். ராமசாமியின் பேரன் ராஜேஷ்குமார். கே.ஆர்.ராமசாமி, 1967ல் திருச்செங்கோடு பார்லி

ராசிபுரம்: ராஜ்யசபா எம்.பி., - தி.மு.க., வேட்பாளராக, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்ட நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி காலத்தில் அவர்களோடு நெருங்கி பழகிய கே.ஆர். ராமசாமியின் பேரன் ராஜேஷ்குமார். கே.ஆர்.ராமசாமி, 1967ல் திருச்செங்கோடு பார்லி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அண்ணாதுரை கேட்டுக் கொண்டதற்கிணங்க பேராசிரியர் அன்பழகனுக்காக தொகுதியை விட்டுக்கொடுத்தார். இதனால், அன்பழகனும், ராமசாமியும் நெருங்கிய நண்பர்களாகினர். ராமசாமியின் மறைவுக்கு பின் அன்பழகனின் ஆசியுடன், நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டார். கடந்த, 2016ல் அண்ணாதுரையின் பிறந்த நாள் மாநில அளவிலான கவிதை கட்டுரைப் போட்டியை நாமக்கல்லில் நடத்தி ஸ்டாலின் கவனத்தை கவர்ந்தார். 2019ல், தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில், 70க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். 11க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் ஆணையாளராக பணியாற்றினார். இதுபோன்ற செயல்பாடுகளால், 2020ல் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பு தொடங்கியபோது, மாவட்டம் முழுவதும் உள்ள தொண்டர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கும் அவர்கள் மூலம் கிராம மக்களுக்கு உதவிகளை செய்யத்தொடங்கினார். தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் உள்ள முக்கிய புள்ளிகளை, தி.மு.க.,வில் இணைக்கும் பணியில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்தே, அ.தி.மு.க.,வில் விசுவாசியாக வலம் வந்த முன்னாள் எம்.பி., சுந்தரத்தை கட்சியில் இணைத்தார். இதனால், கட்சி தலைமையின் கவனத்தை பெற்றார். அதன் பலனாகவே தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராஜேஷ்குமார் பயோடேட்டா


பெயர் : கே.ஆர்.என். ராஜேஷ்குமார்


வயது : 43; திருமணமானவர்


படிப்பு : எம்.காம்.,


சொந்த ஊர்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி ஊராட்சி கட்சி பதவி: 18 வயதில் கட்சி உறுப்பினரானார். 1998ல் கிளைச்செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் வெண்ணந்தூர் ஒன்றிய பிரதிநிதி, ஒன்றிய துணைச்செயலாளராகவும் பதவி வகித்தார். 2011 முதல், 2020 வரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். 2020ல் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X