பொது செய்தி

தமிழ்நாடு

ஆரணி ஓட்டல்களில் தொடர் சோதனை: தரமற்ற 15 கிலோ இறைச்சி பறிமுதல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஆரணி: ஆரணியில், நான்காவது நாளாக ஓட்டல்களில் சோதனை செய்யப்பட்டதில், 15 கிலோ காலாவதியான இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கடந்த, 8ல், செவன் ஸ்டார் என்ற ஓட்டலில் காலாவதியான உணவு சாப்பிட்ட, 40க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் லோஷினா, 10, என்ற சிறுமி கடந்த, 10ல், இறந்தார். இதையடுத்து ஓட்டல்

ஆரணி: ஆரணியில், நான்காவது நாளாக ஓட்டல்களில் சோதனை செய்யப்பட்டதில், 15 கிலோ காலாவதியான இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கடந்த, 8ல், செவன் ஸ்டார் என்ற ஓட்டலில் காலாவதியான உணவு சாப்பிட்ட, 40க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் லோஷினா, 10, என்ற சிறுமி கடந்த, 10ல், இறந்தார். இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் அம்ஷத்பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவுபடி, ஆரணியில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று ஆரணியில் உள்ள சூப்பர் 5 ஸ்டார் ஓட்டலில் ஆய்வு நடத்தி, காலாவதியான மீன், நண்டு உள்ளிட்ட, 15 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர். இது குறித்து கடை உரிமையாளர் சாதிக்பாஷா மீது, தரமற்ற உணவு பொதுமக்களுக்கு வினியோகம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதுவரை நான்கு நாட்களாக நடந்த ஆய்வில், 15 இறைச்சி கடைகளில் ஆய்வு செய்ததில், எட்டு கடைகளில் இருந்து, 50 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். 200 அழுகிய முட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X