பொது செய்தி

தமிழ்நாடு

புதிய சட்டசபை திறப்பு கல்வெட்டு : மருத்துவமனையில் மீண்டும் வைப்பு

Updated : செப் 17, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை :புதிய சட்டசபை திறப்புக்கான கல்வெட்டு, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அகற்றப்பட்ட அதே இடத்தில், நேற்று மீண்டும் வைக்கப்பட்டது.சென்னை அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில், புதிய சட்டசபையுடன் கூடிய தலைமை செயலக வளாக கட்டடம், தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது.இந்த கட்டடத்தை, 2010 மார்ச், 13ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
புதிய சட்டசபை திறப்பு,  கல்வெட்டு மருத்துவமனை, மீண்டும் வைப்பு

சென்னை :புதிய சட்டசபை திறப்புக்கான கல்வெட்டு, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அகற்றப்பட்ட அதே இடத்தில், நேற்று மீண்டும் வைக்கப்பட்டது.சென்னை அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில், புதிய சட்டசபையுடன் கூடிய தலைமை செயலக வளாக கட்டடம், தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்தை, 2010 மார்ச், 13ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், காங்., முன்னாள் தலைவர் சோனியா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்டடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆங்கிலம் மற்றும் தமிழில் தயாரிக்கப்பட்டு, கட்டடத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டது.

அ.தி.மு.க., அரசு 2011ல் பொறுப்பேற்றவுடன், இந்த கட்டடத்தை உயர்சிகிச்சைக்கான அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது.இதையடுத்து, புதிய சட்டசபை திறப்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கல்வெட்டுகள் அகற்றப்பட்டு, அங்குள்ள அறையில் பத்திரப்படுத்தப்பட்டன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரசு பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்ததற்கான கல்வெட்டு புதிதாக வைக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள், இங்கு உயர் சிகிச்சைகளை இலவசமாக பெற்று வருகின்றனர்.

அருகே புதிய அரசு மருத்துவகல்லுாரி கட்டப்பட்டு, மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசு பல்நோக்கு மருத்துவமனை, மீண்டும் புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலகமாக மாற்றப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில், நடந்த சட்டசபை கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.,க்களும், இந்த கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை அகற்றி சட்டசபையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், ஏற்கனவே இருந்த இடத்தில் சட்டசபை திறப்பு நிகழ்ச்சிக்கான கல்வெட்டுக்கள், நேற்று மீண்டும் வைக்கப்பட்டன. ஆனால், மருத்துவமனை திறப்பிற்கான கல்வெட்டுக்கள் அகற்றப்படவில்லை. மீண்டும் சட்டசபை திறப்பு நிகழ்ச்சிக்கான கல்வெட்டு வைக்கப்பட்டு உள்ளதால், நோயாளிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
16-செப்-202121:04:19 IST Report Abuse
sankaseshan தண்ணீர் தொட்டி , சர்க்கஸ் கூடாரம் கட்டு மரம் கட்டினது , 2 கோடி செலவில் தோட்டா தரணியால் செட்போட்டு முடிய்க்க பட்டது . இரண்டு கழகங்களும் மக்கள் பணத்தை வீணடிப்பதில் இருவல்லவர்கள்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-செப்-202120:03:54 IST Report Abuse
sankaseshan குதிரை பந்தயத்தை ஒளித்தோம் என்று சொல்லி வந்திய தேவன் குதிரையை பிடித்து கொண்டிருப் போல சிலை வைத்தார் கட்டுமரம் ஜெமினி மேம்பாலம் அருகில் இருக்கா சிலை
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-செப்-202119:43:51 IST Report Abuse
Pugazh V தமிழக சட்ட மன்றம் துவங்கி நூற்றாண்டு கண்ட பிறகும் இன்னமும் ஜார்ஜ் கோட்டை.வாடகைக் கட்டிடத்தில் இயங்குவது துரதிர்ஷ்டவசமானது. எனவே தான் கலைஞர் தமிழக சட்டமன்ற த்திற்கு ஒரு புதிய கட்டிடம் கட்டினார். போலி ஈகோ மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா.இதை மருத்துவ மனை ஆக்கியது சற்றும் நியாயமற்ற செயல். இந்த கட்டிடம் மீண்டும் சட்ட மன்ற வளாகமாக மாற்றப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X