அரசியல் செய்வதற்கு மட்டுமல்ல; அரசுக்காக திட்டமிடும் இடம் பார்லி.,

Added : செப் 15, 2021
Share
Advertisement
புதுடில்லி:''பார்லிமென்ட் என்பது அரசியல் செய்வதற்கான இடம் மட்டும் அல்ல; அரசுக்காக திட்டங்கள் வகுப்பதற்கான இடமும் கூட,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.பார்லிமென்ட் நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கும் லோக்சபா, 'டிவி' மற்றும் ராஜ்யசபா, 'டிவி' ஆகியவைக், சன்சத் 'டிவி' என்ற பெயரில் ஒரே தொலைக்காட்சியாக இணைக்கப்பட்டுள்ளன.இதன் துவக்க விழா நேற்று

புதுடில்லி:''பார்லிமென்ட் என்பது அரசியல் செய்வதற்கான இடம் மட்டும் அல்ல; அரசுக்காக திட்டங்கள் வகுப்பதற்கான இடமும் கூட,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பார்லிமென்ட் நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கும் லோக்சபா, 'டிவி' மற்றும் ராஜ்யசபா, 'டிவி' ஆகியவைக், சன்சத் 'டிவி' என்ற பெயரில் ஒரே தொலைக்காட்சியாக இணைக்கப்பட்டுள்ளன.இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:இந்த தொலைக்காட்சி வாயிலாக தான் சாமானிய மனிதருக்கும், பார்லிமென்டுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுகிறது. பார்லிமென்ட் என்பது அரசியல் செய்யும் இடம் என்பதை கடந்து, திட்டங்கள் வகுக்கப்படும் இடமாக உள்ளது. சர்வதேச ஜனநாயக தினத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த புதிய தொலைக்காட்சி, நாட்டின் பார்லிமென்ட் நடவடிக்கையில் முக்கிய அத்தியாயத்தை துவக்கி வைக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X