30 கிலோ கடத்தல் தங்கம் முடக்கம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
கொச்சி:கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்கம் முடக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில், சட்ட விரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில், மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு

கொச்சி:கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்கம் முடக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கேரளாவில், சட்ட விரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில், மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு உதவியதாக, கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலர், எம்.சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.


பறிமுதல்



இந்நிலையில், அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தங்கம் கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டோர், துபாயில் இருந்து தொடர்ந்து தங்கம் கடத்தியுள்ளனர். அதில் கிடைத்த வருவாயில் வாங்கிய, 30 கிலோ தங்கத்தை இந்தியாவுக்கு கடத்திய போதுதான், கொச்சி விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கைதானோர் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட, 14.82 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோரின் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X