ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி ஏன்? பா.ம.க., தே.மு.தி.க., விளக்கம்

Updated : செப் 16, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும், அதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளன. கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகியது, அ.தி.மு.க., தலைமையில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் அரவணைத்து, ஆளுங்கட்சியான தி.மு.க., தன் பலத்தை ஏற்றுகிறது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில்
ADMK, DMDK, PMK, ஊரக உள்ளாட்சி தேர்தல், தனித்து போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும், அதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளன. கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகியது, அ.தி.மு.க., தலைமையில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் அரவணைத்து, ஆளுங்கட்சியான தி.மு.க., தன் பலத்தை ஏற்றுகிறது.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., - பா.ஜ., - த.மா.கா., போன்ற கட்சிகள்; அ.ம.மு.க., அணியில் தே.மு.தி.க., மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இடம் பெற்றிருந்தன.தி.மு.க., கூட்டணியில் காங்., - ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், ம.ம.க., மற்றும் பல்வேறு சிறிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தற்போது, ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சி கூட்டணி முறிவு

சட்டசபை தேர்தல் முடிந்த நான்கு மாதங்களில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறி, உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது.அ.ம.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.,வும் கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி முறிந்த நிலையில், ஆளுங்கட்சி கூட்டணி மட்டும் அப்படியே தொடர்கிறது.தனித்துப் போட்டி ஏன் என பா.ம.க., விளக்கம் அளித்துள்ளது. தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டி:


கால அவகாசம் இல்லைஉள்ளாட்சி தேர்தலை அவசர சூழலில் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஒன்பது மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தோம்; அவர்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்றனர். தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே, வேட்பு மனு தாக்கல் துவங்கியது. கூட்டணி கட்சிகள் குழு அமைத்து, யார் யார் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து பேசும்போதே, கட்சியினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் சூழ்நிலை ஏற்படும். இது வீண் குழப்பத்தை உருவாக்கும். கூட்டணி பேச்சு சுமுகமாக முடிந்தாலும், வேட்பு மனு வாபஸ் பெறாமல், கட்சியினர் சுயேச்சையாக போட்டியிடும் வாய்ப்பும் உருவாகும்.

ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் இடத்திற்கு கட்சி தலைமையிடம் பேசி, அவர்கள் மாவட்ட செயலர்களிடம் பேச்சு நடத்த கால அவகாசம் இல்லை. எனவே தான் தனித்துப் போட்டி என்ற முடிவு எடுக்கப்பட்டது. இது ஒரு இடைக்கால முடிவு தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., நீடிக்கிறது. அ.தி.மு.க., தலைமையை ராமதாஸ் விமர்சிக்கவில்லை. பழனிசாமியை ராமதாஸ் விமர்சித்தார் என்ற செய்தியை, யாரோ திட்டமிட்டு பரப்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தே.மு.தி.க., அறிக்கை

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்களை, வரும் 16, 17ம் தேதிகளில், அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர், 4,000 ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர், 2,000 ரூபாய் விருப்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 'சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., அணியில் இருந்ததால் எந்த பயனும் இல்லை என்பதால், தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது' என, தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

பா.ம.க., - தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடுவதால், வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய ஓட்டுகள் கணிசமாக பிரிய வாய்ப்பு உள்ளது. இதனால் எந்த அணிக்கு சாதகம், பாதகம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


அ.தி.மு.க., கொந்தளிப்பு

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், கூட்டணியில் இடம் பெற்று, ராஜ்யசபா எம்.பி., மற்றும் ஐந்து எம்.எல்.ஏ.,க்களை பெற்ற பா.ம.க., தற்போது வட மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு உள்ளதால், அ.தி.மு.க., குறித்து கவலைப்படாமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது, அ.தி.மு.க., தலைமையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ம.க., விலகிய நிலையில், அ.தி.மு.க., அணியில் உள்ள பா.ஜ., தங்களுக்கு செல்வாக்கு உள்ள திருப்பூர், தென்காசி மாவட்டங்களில், கூடுதல் இடங்களை கேட்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மா.செ.,க்களுக்கு உத்தரவு

தி.மு.க., அணியில், காங்கிரசுக்கு ஓட்டு வங்கி உள்ள திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், அக்கட்சி இரட்டை இலக்க சதவீத இட பங்கீட்டை எதிர்பார்க்கிறது. தி.மு.க., விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வட மாவட்டங்களில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் இடங்களை ஒதுக்கீடு செய்ய தி.மு.க., திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணி சிதறிய நிலையில், தங்கள் கூட்டணியை தக்க வைத்துக் கொண்டால், வெற்றியை எளிதில் வசப்படுத்தலாம் என தி.மு.க., கருதுகிறது.

எனவே, கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடனும், இடப் பங்கீடு குறித்து கலந்து பேசி, சுமுக முடிவு எட்ட வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.


'பா.ம.க.,வுக்கு இழப்பு; எங்களுக்கு இல்லை!'

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்துப் போட்டி என்பது, அவர்கள் எடுத்த முடிவு. இதனால், அவர்களுக்குத் தான் இழப்பு; எங்களுக்கு எந்தவிதமான இழப்பும் கிடையாது. அதேநேரம் எங்கள் கட்சியை விமர்சிப்பதை, எந்த விதத்திலும் ஏற்க முடியாது. விமர்சிக்கும் சூழல் தொடர்ந்தால், நாங்களும் விமர்சிக்க வேண்டி வரும்.

யாருடைய கட்டாயத்தில் இந்த முடிவு எடுத்தனர் என்று தெரியாது. எழுதப்படாத ஒப்பந்தம்போல சிலருடன் சேர்ந்து, இந்த முடிவை எடுத்திருக்கலாம். அ.தி.மு.க., ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளோம்.

நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது; மக்களை முழுமையாக மொட்டை அடித்துவிட்டது. இதை மக்கள் உணர்ந்துள்ளனர். தி.மு.க.,வுக்கு எதிரான நிலை, உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்; அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
16-செப்-202121:59:25 IST Report Abuse
S. Narayanan இம்முறை திமுகவுக்கு எல்லா இடங்களிலும் ஆப்பு. தான்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-செப்-202119:42:10 IST Report Abuse
M  Ramachandran ஆ தி மு க்கா பிழை. பாத்திரமறிந்து பிட்சையிடு என்ற பழமொழியை மறந்ததென்னவோ? ராமதாஸ் என்றுமே நன்றி என்பதை அந்த ஆள் அகராதியிலேயே இல்லை. கூட்டணி வைப்பதே குடும்பத்துக்காக தேட்டை போடு வதற்காக.
Rate this:
Cancel
s.மாடசாமி, சிலுக்குவார்பட்டு திமுகவிடம் பொட்டி வாங்கி இருப்பானுங்க. வேற என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X