கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விடுமுறை காலங்களில் கடும் கட்டுப்பாடு நீலகிரியில் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:நீலகிரி மாவட்டத்தில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள, 110 கட்டுமானங்களை வரன்முறைப்படுத்த, தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு

சென்னை:நீலகிரி மாவட்டத்தில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள, 110 கட்டுமானங்களை வரன்முறைப்படுத்த, தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணியரால் தான், நீலகிரியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

சட்டவிரோதமாக ரிசார்ட்டுகள் இயங்குவதாகவும், சுற்றுலா பயணியரின் வாகனங்களால் நச்சு புகை பரவுவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர். குடியிருப்பு கட்டடங்களில் சுற்றுலா பயணியர் தங்க அனுமதிக்கக் கூடாது; வணிக பயன்பாட்டுக்கு குடியிருப்புகளை பயன்படுத்தக் கூடாது; குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலா பயணியர் தங்குகின்றனரா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்யும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

நீலகிரிக்கு, விடுமுறை காலங்களில் அதிக சுற்றுலா பயணியர் வருவதால், போதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதை, அரசு உறுதி செய்யும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இது குறித்து, அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X