அண்ணாதுரை பிறந்த நாள்: கட்சியினர் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை பிறந்த நாள்: கட்சியினர் கொண்டாட்டம்

Added : செப் 15, 2021
Share
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 113வது பிறந்த நாள், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரால் கொண்டாடப்பட்டது. அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.அன்னுார் : அன்னுார் நகர தி.மு.க., சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு, நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.நாவல், வாகை, புங்கன், பூவரசு, வேம்பு உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 113 மரக்கன்றுகளை
 அண்ணாதுரை பிறந்த நாள்: கட்சியினர் கொண்டாட்டம்



மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 113வது பிறந்த நாள், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரால் கொண்டாடப்பட்டது. அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அன்னுார் : அன்னுார் நகர தி.மு.க., சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு, நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.நாவல், வாகை, புங்கன், பூவரசு, வேம்பு உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 113 மரக்கன்றுகளை ஒன்றிய செயலாளர் ஆனந்தன், பொதுமக்களுக்கு வழங்கினார்.மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முரளி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரகமத்துல்லா, நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கதிர்வேல் உள்பட, பலர் பங்கேற்றனர்.

மோளபாளையத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன் தலைமையிலும், அன்னுார் 7வது வார்டில், வார்டு பொறுப்பாளர் பிரபுதேவா தலைமையிலும், விழா நடந்தது.* அ.தி.மு.க., சார்பில், அன்னுார், ஓதிமலை ரோட்டில், நகரச் செயலாளர் சவுக்கத் அலி தலைமையில் கொண்டாடப்பட்டது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகர துணைச் செயலாளர் சண்முகம், சார்பு அணி செயலாளர்கள் குப்புசாமி, ரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம்மேட்டுப்பாளையம் தி.மு.க., வினர், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊர்வலமாகச் சென்று, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம் நகர செயலாளர்கள் முகமது யூனுஸ், முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.* அ.தி.மு.க., வினர், ரயில்வே ஸ்டேஷன் சாலையிலிருந்து ஊட்டி சாலை வழியாக, பஸ் ஸ்டாண்டிற்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு அண்ணாதுரை சிலைக்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ் ஆகியோர், மாலை அணிவித்தனர்.நிகழ்ச்சியில், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* அதேபோன்று அ.ம.மு.க., நிர்வாகிகள் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

சூலுார்தி.மு.க., சார்பில், சூலுார், எலச்சிபாளையம், கரையாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றப்பட்டது. அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில், ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.*அ.தி.மு.க.,வினர், ஒன்றிய அலுவலகத்திலும்,எம்.எல்.ஏ., அலுவலகத்திலும் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X