பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் படித்த பள்ளியிலேயே நாளை முதல் வேலைவாய்ப்பு பதிவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,

சென்னை:'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியாக, வேலைவாய்ப்புத் துறையின், https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

நாளை முதல்பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நாளை வழங்கப் பட உள்ளது. எனவே, நாளை முதல், அக்., 1 வரை, 15 நாட்களுக்கு, ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அவர்கள் படித்த பள்ளியிலேயே, வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில், இந்த வசதியை பயன்படுத்தி, மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள், தங்கள் கல்வித்தகுதியை, வேலைவாய்ப்புத் துறையின் இணைய தளத்தில், தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம்.ஏற்கனவே பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்த மாணவர்கள், அந்த பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில், தாங்கள் படித்த பள்ளியை அணுகி, பிளஸ் 2 தேர்ச்சியை, கூடுதலாக பதிவு செய்து கொள்ளலாம்.

புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் ஆகிய விபரங்களுடன், பள்ளிகளை அணுகி, பதிவு மேற்கொள்ளலாம்.இவ்வாறு வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X