சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

Added : செப் 15, 2021
Share
Advertisement
வேலுார்:'நீட்' தேர்வு எழுதிய காட்பாடி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேலுார் அருகே, காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 63; கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி, 50.இவர்களின் மகள் சவுந்தர்யா, 17, வேலுார் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, 510 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவப்

வேலுார்:'நீட்' தேர்வு எழுதிய காட்பாடி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் அருகே, காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 63; கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி, 50.இவர்களின் மகள் சவுந்தர்யா, 17, வேலுார் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, 510 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவப் படிப்பில் சேர, நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.

கடந்த 12ம் தேதி கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில் நீட் தேர்வு எழுதினார்; தேர்வு கடினமாக இருந்ததாகவும், சரியாக எழுதவில்லை என்றும் தாய், தந்தையிடம் சொல்லி சவுந்தர்யா புலம்பியுள்ளார். பெற்றோர் ஆறுதல் கூறினர். ஆயினும், மனமுடைந்து காணப்பட்டார்.நேற்று காலை திருநாவுக்கரசு, ருக்மணி வெளியே சென்றிருந்தனர்.

வீட்டில் சவுந்தர்யா மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து பெற்றோர் வந்தபோது, அறைக்குள் சவுந்தர்யா சேலையில் துாக்கிட்டு சடலமாக தொங்கினார்.தோல்வி பயத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. லத்தேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X