சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் பழிக்கு பழி பயங்கரம் தலைகளை துண்டித்து வீசிய கும்பல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:-நெல்லையில் பழிக்குப் பழியாக இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தலைகள் துண்டித்து வீசப்பட்டிருந்தன.திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளத்தை அடுத்துள்ள வடுவூர்பட்டியில் செப்., 13 இரவு கீழச்செவலை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், 37, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் தலையை காணவில்லை. கடந்த 2014ல், அரசு பஸ்சில் சென்றபோது மந்திரம் என்பவர் வெட்டிக்
 நெல்லையில் பழிக்கு பழி பயங்கரம் தலைகளை துண்டித்து வீசிய கும்பல்

திருநெல்வேலி:-நெல்லையில் பழிக்குப் பழியாக இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தலைகள் துண்டித்து வீசப்பட்டிருந்தன.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளத்தை அடுத்துள்ள வடுவூர்பட்டியில் செப்., 13 இரவு கீழச்செவலை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், 37, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் தலையை காணவில்லை. கடந்த 2014ல், அரசு பஸ்சில் சென்றபோது மந்திரம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அதற்கு பழிக்கு பழியாக சங்கரசுப்பிரமணியனை கொலை செய்து, அவரது தலையை மந்திரத்தின் சமாதி அருகில் வீசிச் சென்றிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை கோபாலசமுத்திரம் அருகே மாரியப்பன், 38, என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது தலையை துண்டித்த கும்பல், சங்கரசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக, அவரை கொலை செய்த இடத்தில் வீசிச் சென்றனர்.

சம்பவ இடத்தில் எஸ்.பி., மணிவண்ணன், டி.ஐ.ஜி., அபினபு, தென்மண்டல ஐ.ஜி., அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளத்தில் இரு ஜாதியினர் இடையே உள்ள பகையால், தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன. நேற்றைய கொலையில் ஈடுபட்டது 15 - 16 வயது சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X