பஞ்சமி நிலங்களை மீட்க அழுத்தம் கொடுப்போம் * திருமாவளவன் பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஞ்சமி நிலங்களை மீட்க அழுத்தம் கொடுப்போம் * திருமாவளவன் பேட்டி

Added : செப் 15, 2021
Share
காரைக்குடி:பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுப்போம் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன் மேலும் கூறியதாவது;ஈ.வே.ரா.வும் அண்ணாதுரையும் தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சனாதன

காரைக்குடி:பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுப்போம் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன் மேலும் கூறியதாவது;ஈ.வே.ரா.வும் அண்ணாதுரையும் தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சனாதன சக்திகளின் எதிர்ப்பு அடையாளமாக விளங்குகின்றனர்.

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அழித்து விட்டு ஹிந்தியை வளர்க்க வேண்டும் என்று மத்திய அரசு நோக்கம் கொண்டுள்ளது. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி அவர்களது குடும்பத்தை ஆற்றுப்படுத்துவதற்காக வழங்கப்படும் கொடை. அதை விடுத்து ஊக்கப்படுத்துவதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X