பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் மாணவர் சேர அழைப்பு அரசு கல்லுாரியில் 170 இடங்களுக்கு நேரிலும் விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அரசு கல்லுாரியில், கணிதம், ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பட்ட வகுப்புகளில், அதிக காலியிடங்கள் உள்ளன. ஆன்லைன் வாய்ப்பை தவறவிட்டவர்கள், நேரிலும் விண்ணப்பிக்கலாம் என, முதல்வர் சுகுமாரன் அறிவித்துள்ளார்.மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., ஆகிய
 அரசு கல்லுாரியில் மாணவர் சேர அழைப்பு அரசு கல்லுாரியில் 170 இடங்களுக்கு நேரிலும் விண்ணப்பிக்க அழைப்பு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அரசு கல்லுாரியில், கணிதம், ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பட்ட வகுப்புகளில், அதிக காலியிடங்கள் உள்ளன. ஆன்லைன் வாய்ப்பை தவறவிட்டவர்கள், நேரிலும் விண்ணப்பிக்கலாம் என, முதல்வர் சுகுமாரன் அறிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., ஆகிய பிரிவுகளில், 9 பட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.இந்நிலையில், கல்லுாரி வகுப்புகளில், காலிப்பணியிடங்கள் உள்ளதை அடுத்து, மாணவர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்களை பெற்று, கல்லுாரியில் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்லுாரி முதல்வர், சுகுமாரன் கூறியதாவது: மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2021-22 ம் கல்வி ஆண்டு இளநிலை பாடப்பிரிவு சேர்க்கைக்கு, இணைய வழியில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி முடிய, விண்ணப்பப்படிவம் கல்லுாரியில் நேரடியாக வினியோகம் செய்யப்படும். தகுதியுடைய மாணவர்கள், கல்லுாரிக்கு நேரில் வந்து விண்ணப்பக் கட்டணம், 50 ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். இன்று (புதன்கிழமை) 50 மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை பெற்றனர். அதில், 36 பேர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துச் சென்றுள்ளனர்.கல்லுாரியில் பி.ஏ., ஆங்கில வகுப்பில், 30 காலியிடங்களும்; சுற்றுலா மேலாண்மையில், 40; பி.எஸ்.சி., கணித வகுப்பில், 52; வேதியியலில், 9; கம்ப்யூட்டர் சயின்ஸில், 30 காலி இடங்களும் உள்ளன. எனவே, இந்த பாடப் பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள், உடனடியாக விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.இவ்வாறு கல்லுாரி முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X