நகராட்சியில் தொடரும் பனிப்போர் வார்டு வளர்ச்சி பணிகள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் தொடரும் 'பனிப்போர்' வார்டு வளர்ச்சி பணிகள் பாதிப்பு

Added : செப் 15, 2021
Share
பந்தலுார் : நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் இடையே தொடரும் 'பனிப்போரால்' வளர்ச்சி நிதி ரத்தாகும் அபாயம் நிலவிவருகிறது..பந்தலுார், நெல்லியாளர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு கமிஷனர்; பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலையில், 'நகராட்சி ஒப்பந்ததாரர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்த வேண்டும்; அதற்கான

பந்தலுார் : நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் இடையே தொடரும் 'பனிப்போரால்' வளர்ச்சி நிதி ரத்தாகும் அபாயம் நிலவிவருகிறது.

.பந்தலுார், நெல்லியாளர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு கமிஷனர்; பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலையில், 'நகராட்சி ஒப்பந்ததாரர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்த வேண்டும்; அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில ஒப்பந்ததாரர்கள் டெண்டர் விட பல்வேறு வகையிலும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட, 1.5 கோடி ரூபாய் நிதி திரும்பி பெறப்பட்டது.

அதனை அடுத்து, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், பதினெட்டு பணிகளுக்கு, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஐந்து முறை டெண்டர் விடப்படும், ரத்து செய்யப்பட்டது. இதனால், மக்கள் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன.மக்கள் கூறுகையில்,'நகராட்சியில் உயர் அலுவலர்கள் இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு டெண்டர் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X