சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிக்கன் கடைக்காரர் கொலை ஒரே குடும்பத்தில் 4 பேர் கைது

Added : செப் 16, 2021
Share
Advertisement
ராணிபேட்டை:சிக்கன் கடைக்காரர் கொலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே தப்பூர் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 45; சிக்கன் கடை வைத்துள்ளார். மனைவி கங்கா, 35. இவர்களுக்கு நான்கு மகள்கள், இரு மகன்கள் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 75; விவசாயி. மனைவி கிருஷ்ணவேணி, 65, மகன்கள் உமேஷ்,

ராணிபேட்டை:சிக்கன் கடைக்காரர் கொலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே தப்பூர் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 45; சிக்கன் கடை வைத்துள்ளார். மனைவி கங்கா, 35. இவர்களுக்கு நான்கு மகள்கள், இரு மகன்கள் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 75; விவசாயி. மனைவி கிருஷ்ணவேணி, 65, மகன்கள் உமேஷ், 35, அன்பு, 32; அங்கு டிபன் கடை நடத்தி வருகின்றனர்.

ரங்கநாதன், கிருஷ்ணன் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மீண்டும் மோதல் நடந்தது. இதில், கிருஷ்ணன் குடும்பத்தினர் கட்டையால் தாக்கியதில் ரங்கநாதன் இறந்தார்.பாணாவரம் போலீசார், கிருஷ்ணன், அவரது மனைவி, இரு மகன்களை கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X