சம்பவம் செய்தி

தமிழ்நாடு

50 அடி ஆழ கிணற்றில் மிதந்த ஆண், பெண் உடல்

Added : செப் 16, 2021
Share
Advertisement
கோபி:கோபி அருகே, 50 அடி ஆழமுள்ள கிணற்றில், வாலிபருடன் பெண் உடல் கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.ஈரோடு மாவட்டம், கோபி கணேசம்புதுார் அருகே விவசாய தோட்டத்தில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் பெண் உடல் மிதப்பதாக, நேற்று காலை 8:00 மணிக்கு தகவல் பரவியது. கோபி போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்தனர். கிணற்றை சுற்றி ஆண், பெண் அணியும் செருப்பு, பர்ஸ், மொபைல் போன் மற்றும் பூச்சி

கோபி:கோபி அருகே, 50 அடி ஆழமுள்ள கிணற்றில், வாலிபருடன் பெண் உடல் கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபி கணேசம்புதுார் அருகே விவசாய தோட்டத்தில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் பெண் உடல் மிதப்பதாக, நேற்று காலை 8:00 மணிக்கு தகவல் பரவியது. கோபி போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்தனர். கிணற்றை சுற்றி ஆண், பெண் அணியும் செருப்பு, பர்ஸ், மொபைல் போன் மற்றும் பூச்சி மருந்து கிடந்தது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பெண் உடலை மீட்டனர். பின் கிணற்றில் தேடியபோது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் கிடைத்தது.

விசாரணையில், வாலிபர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின், 21 என்றும், பனியன் கம்பெனி வைத்துள்ளதும், திருமணமாகவில்லை எனவும் தெரிந்தது. இறந்து கிடந்த பெண், திருப்பூரைச் சேர்ந்த தங்கமணி, 38, என தெரிந்தது. கணவரை பிரிந்து வாழும் தங்கமணிக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். அவர், அஸ்வின் கம்பெனியில், பணிபுரிந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் பூச்சி மருந்தை குடித்து, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X