பொது செய்தி

தமிழ்நாடு

சாயல்குடியில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் பாதிப்பு; நீர் செல்ல வழியின்றி ஆண்டு தோறும் தொடரும் அவலம்

Added : செப் 16, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி பெரிய கண்மாயில் இருந்து உபரி நீர் இருவேலி மதகு வழியாக வெளியேறஷட்டர் அமைக்கப்பட்டுஉள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. துாரத்திலுள்ள இலந்தைகுளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையில் தற்போது தொடரும் ஆக்கிரமிப்புகளாலும், கட்டுமான கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.சாயல்குடி லிங்கம் கூறியதாவது:சாயல்குடி

சாயல்குடி : சாயல்குடி பெரிய கண்மாயில் இருந்து உபரி நீர் இருவேலி மதகு வழியாக வெளியேறஷட்டர் அமைக்கப்பட்டுஉள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. துாரத்திலுள்ள இலந்தைகுளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல ஓடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓடையில் தற்போது தொடரும் ஆக்கிரமிப்புகளாலும், கட்டுமான கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.சாயல்குடி லிங்கம் கூறியதாவது:சாயல்குடி பெரிய கண்மாயில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல அமைக்கப்பட்ட ஓடை குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. சாயல்குடி நகரின் புறநகர் பகுதியாக விளங்கும் இப்பகுதியில் தொடர்ந்து கட்டுமானப் பணிகளால் புதிய நகர் உருவாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் செல்லக்கூடிய ஓடைப் பகுதி நாளுக்கு நாள் தனியாரின் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகிறது.

பக்கவாட்டு தடுப்புகரை இல்லாமல் மண் அரிப்பு ஏற்பட்டு பொலிவிழந்து உள்ளது. மழை காலங்களில் வரக்கூடிய நீர் செல்ல வழி இல்லாமல் பல இடங்களில் அடைப்பு ஏற்படுத்தி உள்ளனர்.இவற்றை மீட்டெடுத்தால் குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் செல்வதை நிச்சயமாக தடுக்கலாம்

சாயல்குடி கோவிந்தன் கூறியதாவது:இருவேலி ஓடையில்இருந்து வரக்கூடிய தண்ணீர் எம்ஜிஆர் ஊரணி, சந்தனமர ஓடை ஆகியவற்றை நிரப்பி செல்லும்வழியில் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீருடன் மழை நீரும் கலக்கும் அபாயம் நீடிப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி சுகாதாரக்கேடு நிலவுகிறது.மழை காலங்களில் வெள்ளநீர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானம், மாணவியர் விடுதி, குடியிருப்பு கண்மாய் குடியிருப்புகளில் நீண்ட நாட்கள் தேங்கி நிற்கிறது.இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சாயல்குடி ராஜமாணிக்கம் கூறியதாவது:ஓடை செல்லும் பகுதிகளை முறையாக அளவீடு செய்யவேண்டும். அரசு நிலங்கள்தானே என தொடரும் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்கிறது.பொதுப்பணித்துறை, பேரூராட்சி, வருவாய்த் துறையினர், போலீசார், கனிம வளத் துறையினர் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டெடுக்கவும், மழை காலங்களில் இப்பகுதி மக்கள் படும் வேதனைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X