ராமநாதபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்

Added : செப் 16, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். ஊபா சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். ஊபா சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

ராமநாதபுரத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கலையரசன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மனித நேய மக்கள் கட்சி நகர் தலைவர்முகமது அமீம், த.மு.மு.க.,மத்திய மாவட்ட செயலாளர் யாசர், எஸ்.டி.பி.ஐ., நகர் தலைவர் நவாஸ்கான், விசி., மாவட்ட பொறுப்பாளர் விடுதலைசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X