பொது செய்தி

தமிழ்நாடு

கமுதி அருகே வினோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Added : செப் 16, 2021
Share
Advertisement
கமுதி : கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயிலில்பக்தர்கள் வினோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இக் கோயிலில் ஆவணி முளைப்பாரி விழா நடந்தது. இதனையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக காலை 7:00 மணிக்கு பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு

கமுதி : கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயிலில்பக்தர்கள் வினோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக் கோயிலில் ஆவணி முளைப்பாரி விழா நடந்தது. இதனையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக காலை 7:00 மணிக்கு பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு கடந்தாண்டு கோரிக்கை வைத்து நிறைவேறிய பக்தர்கள் வினோத முறையில் சாக்கு வேடம் அணிந்து பிள்ளையார் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அழகுவள்ளி அம்மனுக்குஅபிேஷகம், சிறப்புபூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X