சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

Added : செப் 16, 2021
Share
Advertisement
மதுரை:என்.ஐ.ஏ., அதிகாரிகள் மதுரையில் நேற்று விசாரணை நடத்தினர்.இலங்கையில் இருந்து தமிழகம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவுக்கு செல்ல திட்டமிருந்த 37 இலங்கை தமிழர்கள், கர்நாடக மாநிலம், மங்களூரில் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை - என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.முக்கிய குற்றவாளியான புரோக்கர் துாத்துக்குடியை சேர்ந்த அலங்கார் சாக்ரடீஸ்

மதுரை:என்.ஐ.ஏ., அதிகாரிகள் மதுரையில் நேற்று விசாரணை நடத்தினர்.

இலங்கையில் இருந்து தமிழகம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவுக்கு செல்ல திட்டமிருந்த 37 இலங்கை தமிழர்கள், கர்நாடக மாநிலம், மங்களூரில் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை - என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.

முக்கிய குற்றவாளியான புரோக்கர் துாத்துக்குடியை சேர்ந்த அலங்கார் சாக்ரடீஸ் மதுரை சிறையில் உள்ளார். இவரை நேற்று முன்தினம், ஏழு நாட்கள் காவலுக்கு எடுத்த அதிகாரிகள், நேற்று காலை இடையப்பட்டி இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.தொடர்ந்து, அவரை பெங்களூரு அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X