பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கு நகைக்கடன் விவகாரத்தில் சிக்கல்

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில், அரசு கேட்ட தகவல்களை முறையாக தெரிவிக்காத கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது!' என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் விளக்கம் கேட்டுள்ளார்.கூட்டுறவு வங்கி தலைமை அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள கடிதம்:கூட்டுறவு நிறுவனங்களில், 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வழங்கப்பட்டு,

சென்னை:'நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில், அரசு கேட்ட தகவல்களை முறையாக தெரிவிக்காத கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது!' என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் விளக்கம் கேட்டுள்ளார்.
கூட்டுறவு வங்கி தலைமை அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள கடிதம்:கூட்டுறவு நிறுவனங்களில், 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 31 வரை இருந்த நிலுவைத் தொகை, பயனாளிகள் பட்டியல், பயனாளிகளின் ஆதார் எண், ரேஷன் கார்டு போன்ற விபரங்களை, குறுந்தகடில் அளிக்கும்படி கோரப்பட்டது.

பூர்த்தி செய்ய வேண்டிய விபரங்கள் தொடர்பாக, தெளிவான வழிகாட்டு முறைகள் அனுப்பப் பட்Iடு இருந்தன. ஆனால், தங்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்களில், பல கட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.கடன் வழங்கிய தேதி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

ஆதார், ரேஷன் கார்டு எண் நிரப்பப்படாதது போன்ற குறைபாடுகள் தெரிய வந்துள்ளன. பூர்த்தி செய்ய வேண்டிய விபரங்களை, பூர்த்தி செய்யாதது; தவறான தகவல்களை பூர்த்தி செய்து அனுப்பியது; அதை சரிவர கண்காணிக்க தவறியது ஆகியவற்றுக்காக, தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது; இதற்கான விளக்கத்தை, இக்கடிதம் கிடைத்த, ஐந்து நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
16-செப்-202109:43:19 IST Report Abuse
R.RAMACHANDRAN 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோது இந்த அதிகார வர்கம் செய்த குற்றங்களை கண்டுகொள்ளாததால் இப்போதும் அரசு நிதியத்தை கூட்டுக கொள்ளையடிக்க ஏற்பாடு செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவு.இவர்கள் கடன்கள் தள்ளுபடிக்காக ஏற்கெனவே லஞ்சம் பெற்றுக்கொண்டிருப்பர்.அதனால்தான் புள்ளி விவரம் அவர்களுக்கு சாதகமாக வழங்கியிருப்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X