கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மேய்க்கால் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகம் முழுதும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில், மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பல மாவட்டங்களில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில், 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளன. அவர்களை, அங்கிருந்து அகற்ற

சென்னை:தமிழகம் முழுதும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில், மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பல மாவட்டங்களில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில், 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளன. அவர்களை, அங்கிருந்து அகற்ற உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.இவ்வழக்கில், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:மக்கள் தொகை அதிகரிக்கிறது; குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் அதிகரிக்கின்றன.ஆனால், இருக்கிற நிலங்களை விரிவுபடுத்த முடியாது. ஏற்கனவே, வனப்பகுதி, நீர் நிலைகளின் பரப்பு குறைந்து உள்ளது.

சட்டம் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் உள்ளது.மேய்க்கால் புறம் போக்கு நிலங்களில், 79 ஆயிரம் ஆக்கிரமிப்பாளர்கள் இருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பித்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு தான் உத்தரவு நிறைவேற்றப்படும்.ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும் என கூறினாலும், மாற்று இடம் அளிக்காமல், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாது.

அவ்வாறு அகற்றினால், ஒரு இடத்தில் இருந்து வெறியேறி, மற்றொரு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வர்.இந்தப் பிரச்னையை, குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளின் அதிகாரிகள் அணுக வேண்டும். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இதுகுறித்து, செயல் திட்ட அறிக்கையை, ஐந்து வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, நவ.,10க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X