சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து

Added : செப் 16, 2021
Share
Advertisement
சேதம்சின்னசேலம்-சின்னசேலம் அருகே கம்ப்யூட்டர் சாம்பிராணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி, தோட்டப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி, 40; இவர், அதே பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்

சேதம்சின்னசேலம்-சின்னசேலம் அருகே கம்ப்யூட்டர் சாம்பிராணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி, தோட்டப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி, 40; இவர், அதே பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இங்கு கப் வடிவிலான கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கப்படுகிறது. இந்த சாம்பிராணி தமிழகம் முழுதுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், தகர ஷீட் அடிக்கப்பட்ட குடோனில் திடீரென தீ பிடித்தது. இதில் தயாரிப்பு பகுதி மற்றும் குடோனில் இருந்த சாம்பிராணிகள் மற்றும் மூலப் பொருட்கள் எரிந்தன.தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் மற்றும் ஆத்துார் பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.டி.எஸ்.பி., ராஜலட்சுமி, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X