சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 வீடுகளில் திருட்டு

Added : செப் 16, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், எஸ்.என்.சாவடி, சிவசக்தி நகரைச்சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்; இரும்புக் கடை வைத்துள்ளார். இவர், சென்னையில் படிக்கும் தனது மகளை கல்லுாரியில் விடுவதற்காக, கடந்த 13ம் தேதி குடும்பத்துடன் சென்றார்.நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன்பக்க கதவு

கடலுார்-கடலுாரில் அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், எஸ்.என்.சாவடி, சிவசக்தி நகரைச்சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்; இரும்புக் கடை வைத்துள்ளார். இவர், சென்னையில் படிக்கும் தனது மகளை கல்லுாரியில் விடுவதற்காக, கடந்த 13ம் தேதி குடும்பத்துடன் சென்றார்.நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே தகவல் கிடைத்து, வீட்டின் உரிமையாளர் முகமது இஸ்மாயில் வந்தார்.பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள், ரூ. 22 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் என, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயிருந்தது.மற்றொரு சம்பவம்செம்மண்டலம், காந்தி நகரில் வசித்தவர் சந்திரமோகன் மனைவி சுமதி, 55; கணவர் இறந்ததால், தனியாக வசித்தார். இவர், அமெரிக்க செல்ல இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்ய நேற்று முன்தினம் சென்னை சென்றார். அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. தகவலின் பேரில் புதுநகர் போலீசார் வீட்டிற்குள் பார்வையிட்டனர். வீட்டு உரிமையாளருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் வந்த பிறகே திருட்டு போன பொருட்கள் பற்றிய விபரம் தெரியவரும்.இரு வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கடலுார் புதுநகர் போலலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X