சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

Added : செப் 16, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம்-பகண்டைகூட்ரோட்டில் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் குபேந்திரன் 9; தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மதியம் 12:30 மணியளவில், குபேந்திரன் தனது நண்பர்களுடன் குளத்துமேட்டுத் தெருவில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தார்.அப்போது,

ரிஷிவந்தியம்-பகண்டைகூட்ரோட்டில் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் குபேந்திரன் 9; தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மதியம் 12:30 மணியளவில், குபேந்திரன் தனது நண்பர்களுடன் குளத்துமேட்டுத் தெருவில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தார்.அப்போது, ஆழமான பகுதியில், குபேந்திரன் நீரில் மூழ்கினார். சக சிறுவர்கள் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள் குபேந்திரனை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்ததில், ஏற்கனவே குபேந்திரன் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X