பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கிராமங்களில் அதிகரிப்பு! எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுரை

Added : செப் 16, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி : கிராமப்புறங்களில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கிராமங்களின் முட்டுச்சந்து வரை, ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. செல்போன்களும், சமூக வலைத்தளங்களும் தவிர்க்க முடியாத அங்கங்களாகி விட்டன. நகர்ப்புறத்துக்கு இணையாக, கிராமங்களிலும்,

கருமத்தம்பட்டி : கிராமப்புறங்களில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கிராமங்களின் முட்டுச்சந்து வரை, ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. செல்போன்களும், சமூக வலைத்தளங்களும் தவிர்க்க முடியாத அங்கங்களாகி விட்டன. நகர்ப்புறத்துக்கு இணையாக, கிராமங்களிலும், ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

இவை தரும் வசதி அளவுக்கு, வம்புகளும் அதிகம். சிறுவர், சிறுமியர் கடந்த இரு ஆண்டுகளாக ஆன் லைன் வகுப்பு மூலம் பாடம் படிக்கின்றனர். எந்நேரமும் செல்போனும் கையுமாக திரிகின்றனர்.இதனால், சமூகவலைத்தளங்களின் வாயிலாக, வேண்டாத விருந்தாளிகளை வீட்டுக்கு அழைக்கின்றனர். இதைப்பயன்படுத்தி, சில காமுகர்கள், பெண்கள், சிறுமிகளுக்கு வலை விரிக்கின்ரனர். ஆசை வார்த்தை கூறி, போலியான நட்பை வளர்த்துக்கொண்டு, கடைசியில், அவர்களை கடத்திச் சென்று, தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கிராமங்களில் அதிகரிக்கும் வேகம் அச்சமூட்டுவதாக உள்ளது.கருமத்தம்பட்டி, சூலுார், சுல்தான்பேட்டை பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 10க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றை விசாரித்த போலீசார், குற்றவாளிகளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சமீபத்தில், கருமத்தம்பட்டியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி, தெக்கலுாரில் உள்ள, தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு, அருகில் வசிக்கும் டிரைவர், ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். தகவலறிந்த போலீசார், வழக்குப்பதிந்து, டிரைவரைக் கைது செய்தனர்.போலீசார் எச்சரிக்கை இதுபோன்ற சம்பவங்களுக்கு, ஸ்மார்ட்போன்கள் முக்கிய காரணியாக மாறியுள்ளன.இதனால், கல்வி அறிவு குறைந்த, ஏழை, நடுத்தர, கிராமப்புற மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"சிறுவர், சிறுமிகளை எப்போதும் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது பெற்றோரின் முக்கிய வேலையாக இருக்க வேண்டும். அறைக்குள் ஆன் லைனில் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என, அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.கண்ணில் படும்படியான இடத்தில் அமர்ந்து படிக்க அறிவுறுத்த வேண்டும். சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் இருந்தால், கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும். மொத்தத்தில் கண்காணிப்பு என்பது, 24 மணி நேரமும் இருக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X