சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதலைஇழுத்துச் சென்ற முதியவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
சிதம்பரம்-சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற முதியவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பழைய நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 65; தி.மு.க., கிளை செயலாளர். இவர் நேற்று முன்தினம் இரவு கை கால் கழுவ ஆற்றில் இறங்கினார். அப்போது முதலை கடித்து இழுத்து சென்றது. தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார்

சிதம்பரம்-சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற முதியவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பழைய நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 65; தி.மு.க., கிளை செயலாளர். இவர் நேற்று முன்தினம் இரவு கை கால் கழுவ ஆற்றில் இறங்கினார். அப்போது முதலை கடித்து இழுத்து சென்றது. தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் படகில் சென்று நீண்ட நேரம் தேடினர்.நேற்று கோபாலகிருஷ்ணன் உடலோடு திடீரென முதலை வெளியேறி வேறு இடத்திற்கு சென்றது. படகில் விரட்டியபடி தீயணைப்பு வீரர்கள் சென்று, உடலை மீட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது சகோதரர் அறிவானந்தம் என்பவரும் முதலை கடித்து இழுத்து சென்று இறந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று காலை மாவட்ட வன அலுவலர் செல்வம், பாதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு, அரசு நிவாரண தொகை ரூ. 50 ஆயிரம் வழங்கினார். சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் அஜிதா, வனக்காப்பாளர் அனுசுயா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X