சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடகுக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தியவர் கைது

Added : செப் 16, 2021
Share
Advertisement
பெண்ணாடம்-அடகுக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது தம்பியை தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், சுமைதாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 52; துறையூரில் அடகுக்கடை வைத்துள்ளார். கடந்த 13ம் தேதி முருகன்குடி சென்று தனது பைக்கில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.சின்னகொசப்பள்ளம்

பெண்ணாடம்-அடகுக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது தம்பியை தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், சுமைதாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 52; துறையூரில் அடகுக்கடை வைத்துள்ளார். கடந்த 13ம் தேதி முருகன்குடி சென்று தனது பைக்கில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.சின்னகொசப்பள்ளம் அருகே பைக்கில் முகக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் ராஜாவை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பினர்.படுகாயமடைந்த ராஜா திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனர். சிகிச்சை பெற்று வந்த ராஜாவிடம் போலீசார் நேற்று மீண்டும் விசாரித்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் இருவரில் ஒருவர் வலது காது பகுதியில் கருப்பு மரு உள்ளதாக தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் தேரடி அருகே உள்ள சதீஷ்குமாருக்கு சொந்தமான நகை கடையில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரின் வலது காது பகுதியில் கருப்பு மரு இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.விசாரணையில் நகை கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நானும், எனது தம்பி மகேஷ்குமார் இருவரும் ராஜாவை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பிச்சென்றோம் என ஒப்புக்கொண்டார்.பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மகேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X