இந்தியா

அனுமதி: இரவு 10.00 வரை கடைகள் இயங்க ...30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்து, இம்மாதம் 30ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள், பூங்காக்கள் இரவு 10.00 மணி வரையும், ஓட்டல்கள், ஜூஸ், டீ கடைகள், இரவு 11.00 மணி வரையும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 1ம் தேதி பிறப்பிக்கப்பட்ட, தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு, நேற்று நள்ளிரவுடன்

புதுச்சேரி-புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்து, இம்மாதம் 30ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள், பூங்காக்கள் இரவு 10.00 மணி வரையும், ஓட்டல்கள், ஜூஸ், டீ கடைகள், இரவு 11.00 மணி வரையும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 1ம் தேதி பிறப்பிக்கப்பட்ட, தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு, நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளித்து, செப்., 30ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, புதுச்சேரி மாநில செயலாக்க குழு உறுப்பினர் செயலர் அசோக்குமார் பிறப்பித்து உள்ளார்.கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்புஏற்கனவே, அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை, 'ஏசி' வசதி இல்லாமல் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, அனைத்து கடைகளும் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 வரை செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.இதேபோல், காய்கறி, பழக்கடைகள், காலை 5.00 மணி முதல் இரவு 10.00 வரை திறக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. முன்பு, இக்கடைகள் இரவு 9.00 மணி மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது.

பூங்காக்கள்கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரை திறக்க முன்பு அனுமதிக்கப் பட்டது. இனி இவை, இரவு 10.00 மணி வரை திறந்து இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுக்கடைகள்சில்லறை விற்பனை பார்கள், காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை செயல்பட்டு வந்தன. தற்போது, இரவு 10.00 மணி வரை திறக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.கள்ளு, சாராயக்கடைகளை காலை 6.00 மணி முதல் இரவு 10.00 வரை செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. முன்பு, இந்தக் கடைகள் காலை 9.00 மணி முதல் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ரெஸ்டாரண்ட், ஓட்டல்களில் உள்ள சுற்றுலா பார்கள் இரவு 11.00 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.உணவு விடுதிகள்ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட், லாட்ஜ்கள், கெஸ்ட் ஹவுஸ்கள் இரவு 10.00 மணி வரை இயங்க, முன்பு அனுமதிக்கப்பட்டது.இவை, இனி இரவு 11.00 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இரவு 9.00 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட டீ கடைகள், ஜூஸ் கடைகள், இனி இரவு 11.00 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தளர்வுகள்

வழிபாட்டு தலங்களில் நடைபெறும் திருமணத்தில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீடிக்கிறது.இரவு நேர ஊரடங்கு இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5.00 வரை என்பது, மாற்றம் இன்றி தொடர்கிறது. சினிமா தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இரவு 9.00 மணி வரை இயங்கலாம் என்பது உட்பட, ஏற்கெனவே அளிக்கப்பட்ட தளர்வுகள் தொடர்கின்றன.சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் ஒன்று கூடுதலுக்கான தடை தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X