சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறப்பு டி.ஜி.பி., பாலியல் வழக்கு 27க்கு விசாரணை ஒத்திவைப்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
விழுப்புரம்-பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., - எஸ்.பி., மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கடந்த பிப்ரவரி மாதம் அளித்த புகாரின் பேரில், சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இது தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., மீதும்

விழுப்புரம்-பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., - எஸ்.பி., மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கடந்த பிப்ரவரி மாதம் அளித்த புகாரின் பேரில், சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இது தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., மீதும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டி கார் சாவியைப் பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணைக்கு, சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். சிறப்பு டி.ஜி.பி., தரப்பில், ஆஜரான வழக்கறிஞர்,'உளுந்துார்பேட்டை - செங்கல்பட்டு வரை குற்றம் நடைபெற்றதாக குற்றப் பத்திரிகையில் தாக்கல் செய்துள்ளனர். எனவே, இவ்வழக்கை உளுந்துார்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் நடத்த வேண்டும். இங்கு விசாரிக்க விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே, வழக்கை விசாரிக்கக் கூடாது என வாதிட்டார்.இதையடுத்து, நீதிபதி கோபிநாதன், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால், இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது' என்றார்.தொடர்ந்து, அரசு தரப்பில், வழக்கறிஞர் வைத்தியநாதன், சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அடிப்படையில் இவ்வழக்கை விசாரிக்க விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்றார்.இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு, ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X