பொது செய்தி

இந்தியா

விழாக் கால மானிய தொகை பெற முப்படை நலத்துறை அழைப்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-அறுபது வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரர்களின் விதவையர்களுக்கு விழாக்கால மானிய தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.புதுச்சேரி முப்படை நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி முப்படை நலத்துறை மூலமாக, 60 வயது நிறைவுற்ற ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு, 2020-21 ஆண்டிற்கான விழாக்கால

புதுச்சேரி-அறுபது வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரர்களின் விதவையர்களுக்கு விழாக்கால மானிய தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.புதுச்சேரி முப்படை நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி முப்படை நலத்துறை மூலமாக, 60 வயது நிறைவுற்ற ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு, 2020-21 ஆண்டிற்கான விழாக்கால மானிய தொகை ரூ.4,000 பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.இது சம்பந்தமாக பயனாளிகள், இத்துறை வழங்கிய அசல் அடையாள அட்டையுடன், வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள், இவ்வலுவலகத்தில் கையொப்பமிட்டு, அடையாள அட்டையின் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.கடந்தாண்டு வங்கி கணக்கு விபரங்களை சமர்ப்பிக்காத பழைய பயனாளிகள், புதிதாக இந்தாண்டு 60 வயதை கடந்தவர்கள், அடையாள அட்டையின் பிரதி, வாழ்வு சான்றிதழ், வங்கி கணக்கு விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு முப்படை நலத் துறையை 0413-2253107 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X