பொது செய்தி

இந்தியா

அண்ணாதுரை பிறந்த நாள் விழா...

Added : செப் 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 113வது பிறந்த நாள் விழா, நேற்று அரசு சார்பில் கொண்டாடப் பட்டது.பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க., சார்பில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், ஏ.எப்.டி., திடலில் இருந்து ஊர்வலமாக சென்று

புதுச்சேரி-தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 113வது பிறந்த நாள் விழா, நேற்று அரசு சார்பில் கொண்டாடப் பட்டது.பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க., சார்பில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், ஏ.எப்.டி., திடலில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். மாநில அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அ.தி.மு.க., சார்பில் கிழக்கு மாநில செயலர் அன்பழகன் தலைமையில், உப்பளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். ஜெ., பேரவை செயலர் பாஸ்கர், தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன், கணேசன், அன்பானந்தம், ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அ.தி.மு.க., மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் குயவர்பாளையம், லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். அவைத் தலைவர் ராமதாஸ், துணை தலைவர்கள் நந்தன், ஓவியா ஆனந்தன், மாநில இணை செயலாளர் காசிநாதன், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X