கடன் பெற்று தருவதாக ரூ.4.60 லட்சம் மோசடி

Added : செப் 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கடன் பெற்றுத் தருவதாக கூறி, தனியார் ஊழியரிடம் 4.60 லட்சம் ரூபாயை நுாதன முறையில் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.நெட்டப்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன்,39. பள்ளித் தென்னல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவானந்தம்,42. இருவரும், வடமங்கலத்தில் உள்ள இந்துஸ்தான் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.சரவணனுக்கு கடந்த 2018ம்

புதுச்சேரி-கடன் பெற்றுத் தருவதாக கூறி, தனியார் ஊழியரிடம் 4.60 லட்சம் ரூபாயை நுாதன முறையில் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.நெட்டப்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன்,39. பள்ளித் தென்னல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவானந்தம்,42. இருவரும், வடமங்கலத்தில் உள்ள இந்துஸ்தான் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.சரவணனுக்கு கடந்த 2018ம் ஆண்டு அவசரமாக 5 லட்சம் ரூபாய் பணம் தேவை ஏற்பட்டது. இது தொடர்பாக சிவானந்தனிடம் சரவணன் ஆலோசனை கேட்டுள்ளார். சிவானந்தம், நவமால் காப்பேரி கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்,30, என்பவரை அறிமுகப்படுத்தினார்.அவர், தனியார் வங்கியில் பணிபுரியும் புதுச்சேரி செயின்ட் தாழ் வீதியை சேர்ந்த மணிகண்டன்,35, என்பவரிடம் கூறி கடன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.பின்னர், அய்யப்பன், மணிகண்டன் ஆகிய இருவரும், சரவணனை அணுகி அவரது வங்கி கணக்கு விபரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பெற்றுச் சென்றுள்ளனர்.சிறிது நாட்களுக்கு பிறகு சரவணனை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மணிகண்டன், 'உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை. பரிவர்த்தனையும் நடக்கவில்லை. இப்படி இருந்தால் வங்கி கடன் கிடைக்காது.நான் வங்கியின் கேஷியராக இருப்பதால், வங்கி கலெக் ஷன் பணத்தை உங்கள் வங்கி கணக்கில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 900 ரூபாய் வரவு வைக்கிறேன். அதை உடனே அய்யப்பன் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுங்கள்' என கூறியுள்ளார்அதன்படி, சரவணன், 21.12.2018ல் தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட 4.60 லட்சம் ரூபாயை, நெட் பேங்க்கிங் மூலம் அய்யப்பனுக்கு அனுப்பினார். அதன் பிறகும் வங்கிக் கடன் கிடைக்கவில்லை.இதுகுறித்து கேட்டபோது, வங்கி நடைமுறையால் கடன் கிடைக்க தாமதம் ஆகிறது. சற்று பொறுத்திருங்கள் என மணிகண்டனும், அய்யப்பனும் கூறி வந்தனர்.இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு, தனியார் வங்கியிடமிருந்து சரவணனுக்கு வந்த நோட்டீசில், '4.60 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தவணை தொகை கட்டவில்லை. கடன் தொகையை வட்டியுடன் செலுத்தா விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டு இருந்தது.அதிர்ச்சியடைந்த சரவணன் வங்கிக்கு சென்று விசாரித்த போது, ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். அவர்கள் வழக்கு பதிய மறுத்தனர். புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்த மாதம் ஜூன் 21ம் தேதி சரவணன் முறையிட்டார். இந்த மனுவை ஏற்ற கோர்ட், அய்யப்பன், மணிகண்டன், சிவானந்தம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.அதை தொடர்ந்து, அய்யப்பன் உள்ளிட்ட மூவர் மீதும் பெரியக்கடை போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X