தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

Added : செப் 16, 2021
Share
Advertisement
வில்லியனுார்--வேலைக்கு செல்லாமல் வீடியோ கேம் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் அடுத்த வி.மணவெளி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுதா(35). நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்த சுதா, கொம்பாக்கத்தை சேர்ந்த பரதன் என்பவரை

வில்லியனுார்--வேலைக்கு செல்லாமல் வீடியோ கேம் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் அடுத்த வி.மணவெளி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுதா(35). நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்த சுதா, கொம்பாக்கத்தை சேர்ந்த பரதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவரது மகன்கள் சூர்யா(19), ஸ்ரீராம் (18) ஆகிய இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.சூர்யா, சரிவர வேலைக்கு செல்லாமல், வீட்டில் வீடியோகேம் விளையாடி வந்துள்ளார். இதை, தாயார் சுதா கண்டித்துள்ளார்.இதனால் மனைமுடைந்த சூர்யா, கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார். அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X