போக்குவரத்து துறையில் பேன்சி எண்கள் ஏலம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து துறையில் பேன்சி எண்கள் ஏலம்

Added : செப் 16, 2021
Share
புதுச்சேரி-போக்குவரத்து துறையில், வாகனங்களுக்கான பேன்சி பதிவெண்கள், வரும் 24ம் தேதி வரை, இணையதளம் மூலமாக ஏலம் விடப்படுகிறது.போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி போக்குவரத்து துறையில், பிஒய்-01-விடி (காட்டுக்குப்பம்) வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில்ஏலம் விடப்பட உள்ளது.இந்த ஏலம், நாளை (17ம் தேதி) முதல் 24ம் தேதி

புதுச்சேரி-போக்குவரத்து துறையில், வாகனங்களுக்கான பேன்சி பதிவெண்கள், வரும் 24ம் தேதி வரை, இணையதளம் மூலமாக ஏலம் விடப்படுகிறது.போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி போக்குவரத்து துறையில், பிஒய்-01-விடி (காட்டுக்குப்பம்) வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில்ஏலம் விடப்பட உள்ளது.இந்த ஏலம், நாளை (17ம் தேதி) முதல் 24ம் தேதி மாலை 4:30 வரை நடைபெறும்.ஏலத்தில் பங்கேற்க தேவையான பெயர், கடவு சொல்லை (பாஸ் வேர்டு) https://parivahan.gov.ih//fancy என்ற இணையதளத்தில், நாளை துவங்கி 23ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.ஏல நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நாளை முதல் https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத் தொகை, இ.எம்.டி., உள்ளிட்ட விபரங்களை போக்குவரத்து துறை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X