புதிதாக 124 பேருக்கு தொற்று கொரோனாவிற்கு 2 பேர் பலி

Added : செப் 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தொற்று பாதித்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,345 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 124 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தொற்று பாதித்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,345 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 124 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 338 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 2 பேர், தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.அதனால் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 1825 ஆக உயர்ந்தது. மருத்துவமனைகளில் 170 பேர், வீட்டு தனிமையில் 730 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில் தொற்று பரவல் 2.32 சதவீதமாக அதிகரித்துள்ளது. இறப்பு சதவீதம் 1.46 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.82 ஆக உள்ளது.நேற்று முன்தினம் வரை இரண்டாவது டோஸ் உட்பட 8 லட்சத்து 77 ஆயிரத்து 120 தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X