பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

Added : செப் 16, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் (வடக்கு) உதயசூரியன் எம்.எல்.ஏ., (தெற்கு) வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் (வடக்கு) உதயசூரியன் எம்.எல்.ஏ., (தெற்கு) வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார்.கூட்டத்தில், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் கம்பன், அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மணிகண்ணன், கிரி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அங்கையற்கண்ணி, மூக்கப்பன், பச்சையாப்பிள்ளை உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு, தலைமை தாங்கிய அமைச்சர் வேலு பேசுகையில், 'உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்கள் பதவிக்கு வரவேண்டும். அதற்கான பணிகளை அனைவரும் ஒன்றுபட்டு செய்திட வேண்டும்.கட்சி வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று தவறில்லாமல், வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.மாவட்டம் முழுவதும் அனைத்து பதவிகளிலும், நம் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்தபின் அந்தந்த ஒன்றிய சேர்மன் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது கட்சியின் கட்டுப்பாட்டின்படி முடிவு செய்யப்படும். இதில் மாவட்ட செயலாளர்களின் குறுக்கீடு இருக்காது' என்றார்.நகர செயலாளர் சுப்ராயலு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X