ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

Added : செப் 16, 2021
Share
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு ஓட்டு எண்ணிக்கை மையமாக முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் இம்மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, மையத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு ஓட்டு எண்ணிக்கை மையமாக முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் இம்மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, மையத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து தொரவி கிராமத்தில் பதற்றமான ஓட்டுச் சாவடியை ஆய்வு செய்தார்.எஸ்.பி., ஸ்ரீ நாதா, துணை கலெக்டர் (பயிற்சி) ரூபினா, ஆர்.டி.ஓ., அரிதாஸ் , ஊராட்சிகள் திட்ட இயக்குனர் சங்கர்,உதவி இயக்குனர் ஜோதி உட்பட பலர் உடனிருந்தனர்.விழுப்புரம்கோலியனுார் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுசாவடி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கோலியனுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுப் பெட்டிகள் வைக்கும் ஸ்ட்ராங் ரூம், தடுப்புக் கட்டை வசதிகள், ஓட்டு எண்ணும் இடம் உள்ளிட்டவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.இதையடுத்து, இரு ஒன்றியங்களில் உள்ள பதற்றமான ஓட்டுச் சாவடி மையங்களை ஆய்வு செய்தார். எஸ்.பி., ஸ்ரீநாதா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X