அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் காலிஸ்தான்; அரசுக்கு எச்சரிக்கை 'ரிப்போர்ட்'

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவில், பாக்., ஆதரவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் வேகமாக வளர்ந்து வருவதாக, ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்து உள்ளது.அமெரிக்காவில் செயல்படும், காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் குறித்து, ஹட்சன் மையம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் நாடாக
Khalistani groups, US, Khalistan

வாஷிங்டன் : அமெரிக்காவில், பாக்., ஆதரவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் வேகமாக வளர்ந்து வருவதாக, ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்து உள்ளது.

அமெரிக்காவில் செயல்படும், காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் குறித்து, ஹட்சன் மையம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் நாடாக அறிவிக்கக் கோரும் அமைப்புகள், அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றன.


பாக்., உதவி


அதுபோல, காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களும்,அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. இந்த அமைப்புகளுக்கு, பாக்., உதவி வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள், இந்தியாவுக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்கின்றனர்.


latest tamil news


காலிஸ்தான் தனி நாடு கோரி வன்முறையில் ஈடுபடுகின்றனர். இது குறித்து, இந்தியா பல முறை அமெரிக்காவிடம் புகார் தெரிவித்துள்ளது. ஆனால், துரதிர்ஷடவசமாக, அமெரிக்க அரசு பிரிவினைவாத அமைப்புகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

அமெரிக்க அரசு, பஞ்சாபில், வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக உள்ள, காலிஸ்தான் பிரிவினைவாதிகளையும், அவர்களின் பயங்கரவாத செயல்களையும் கட்டுப்படுத்த, முன்னுரிமை அளிக்க வேண்டும். தவறினால், 1980ல் காலிஸ்தான் நிகழ்த்தியது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது. அதனால், அமெரிக்க அரசு, காலிஸ்தான் அமைப்பை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிடில், மிகப் பெரிய அளவிலான உயிரிழப்பை தடுக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
18-செப்-202106:59:43 IST Report Abuse
 Muruga Vel ஸன்ஹோஸே குருத்வாரா சென்றால் ஒரே காலிஸ்தான் பிரச்சாரம் தான்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
16-செப்-202113:22:22 IST Report Abuse
Anand காலிஸ்தான் அமைப்பு அமெரிக்காவில் வேகமாக வளர்ந்தால் அது அமெரிக்காவுக்கு தான் ஆபத்து, இந்தியாவிற்கு இது புதிதல்ல, எல்லா தீவிரவாத அமைப்புகளையும் ஒருசேர துவம்சம்சம் செய்யும் வல்லமை இந்தியாவிற்கு உண்டு, கடந்த காலங்களில் செய்தும் உள்ளது.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
16-செப்-202110:40:56 IST Report Abuse
GMM ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. பின் ஏன் சில (ஆதிக்க ) குழுக்கள் பிரிவினையை விரும்புகின்றன? தமிழகத்தில் திராவிடம் தமிழர்கள் உழைப்பில் மேம்பட்டு , திராவிட நாடு, மாநில சுயாட்சி என்று கோரிக்கை வைத்தன. காஷ்மீர் பண்டிட் வளங்களை அபகரித்து ஆதிக்க குழுக்கள் பிரிவினை கோஷம். காலிஸ்தான் உணர்வு ஏற்பட இந்திரா காங்கிரஸ். பிரிவினையை உழைக்கும் மக்கள் விரும்புவது இல்லை. மூளை சலவை செய்து மக்கள் ஆதரவை வளர்த்து விடுவர். வரி பணத்தில் தனி நபர் செலவுகளை அரசு பராமரிக்க வேண்டும். அரசின் நில அபிவிருத்தி செலவை நிலத்தின் விலை மீது ஏற்ற வேண்டும். யாராலும் திரும்ப கொடுக்க முடியாது. இது பிரிவினை உணர்வை நீர்த்து போக செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X