பொது செய்தி

தமிழ்நாடு

சுய உதவிக்குழுவினர் மூலம் குளங்களில் மீன் வளர்ப்பு: கலெக்டர் நடவடிக்கை

Added : செப் 16, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 40 ஊராட்சி குளங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மீன் வளர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்திலி ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் குளத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2,500 எண்ணிக்கையில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை மற்றும் புல் கெண்டை ரக மீன் குஞ்சுகளை வளர்ப்புக்காக கலெக்டர் ஸ்ரீதர்
 சுய உதவிக்குழுவினர் மூலம் குளங்களில் மீன் வளர்ப்பு: கலெக்டர் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 40 ஊராட்சி குளங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மீன் வளர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்திலி ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் குளத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2,500 எண்ணிக்கையில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை மற்றும் புல் கெண்டை ரக மீன் குஞ்சுகளை வளர்ப்புக்காக கலெக்டர் ஸ்ரீதர் விட்டார்.அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பிற துறைகளுடன் இணைந்து கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் அங்கமாக இந்திலி முருகன் கோவில் குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.இந்திலி வாழ்ந்து காட்டுவோம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு இந்த மீன் ரகங்கள் வழங்கப்பட்டுள்ளது.தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் 2021ன் கீழ் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான குளங்களில் ஒரு எக்டேர் பரப்பளவில் 5,000 மீன் குஞ்சுகள் வீதம் 10 எக்டேர் பரப்பளவில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட உள்ளன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 40 ஊராட்சி குளங்களில் சுய உதவிக்குழுக்கள் மூலம் மீன் வளர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மீன் குஞ்சுகளை வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.தொடர்ந்து மீன் வளத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தேவநாதன், மீன் வளத்துறை ஆய்வாளர் சந்திரமணி மற்றும் உதவித் திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X