பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Added : செப் 16, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-முன்னாள் முதல்வர் அண்ணதுரை பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர் கணேசன் மரியாதை செலுத்தினார்.விருத்தாசலம் நகர தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அரங்கபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் குருசரஸ்வதி, ஆதிதிராவிடர்

விருத்தாசலம்-முன்னாள் முதல்வர் அண்ணதுரை பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர் கணேசன் மரியாதை செலுத்தினார்.விருத்தாசலம் நகர தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அரங்கபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் குருசரஸ்வதி, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கணேசன், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார். மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் நம்பிராஜன், சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி பாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல், காமராஜ், ராஜா, வெங்கடேசன் பங்கேற்றனர்.இதேபோல், தே.மு.தி.க., சார்பில் அண்ணாதுரை சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நகர தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரமேஷ், துணை செயலாளர்கள் இளங்கோவன், பாலமுருகன், இளைஞரணி செயலாளர்கள் மகேஷ், செந்தில், கேப்டன் மன்ற மாணிக்கவாசகம், வயலுார் சக்கரபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X