சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடியிருக்க நிரந்தர இடம்கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Added : செப் 16, 2021
Share
Advertisement
கடலுார்-குடியிருக்க நிரந்தர இடம் கேட்டு, கடலுார் அருகே ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் சாலை விரிவாக்கப்பணிக்காக, நத்தவெளி ரோட்டில் குடியிருந்த 74 வீடுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு திருமாணிக்குழியில் மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு செல்ல அவர்கள்

கடலுார்-குடியிருக்க நிரந்தர இடம் கேட்டு, கடலுார் அருகே ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் சாலை விரிவாக்கப்பணிக்காக, நத்தவெளி ரோட்டில் குடியிருந்த 74 வீடுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு திருமாணிக்குழியில் மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு செல்ல அவர்கள் மறுத்துவிட்டதால், ஊராட்சி தலைவர் சரவணன் முயற்சியால், அதே ஊராட்சிக்குட்பட்ட கெடிலம் ஆற்றங்கரையொட்டி அரசு இடத்தில் தற்காலிகமாக மாற்று இடம் வழங்கப்பட்டது.அங்கு அவர்கள் குடியிருந்துவரும் நிலையில், அப்பகுதியில் நகராட்சி சார்பில் குப்பை கொட்டப்பட உள்ளதாக தெரிகிறது. இதையறிந்த அப்பகுதியில் குடியிருப்பவர்கள், தங்களுக்கு நிரந்தர மாற்று இடம் கேட்டும், தற்போது குடியிருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் பாதிரிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த கடலுார் தாசில்தார் பலராமன், ஊராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரிசிபெரியாங்குப்பத்தில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X