மாயமான மூதாட்டி மர்ம சாவு: பெண்ணாடத்தில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான மூதாட்டி மர்ம சாவு: பெண்ணாடத்தில் பரபரப்பு

Added : செப் 16, 2021
Share
பெண்ணாடம்-காணாமல் போன மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், கீழப்புது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 70. விவசாயி. இவரது மனைவி முருகம்மாள், 60. இவர்களுக்கு இரண்டு மகன்கள். சிங்கப்பூரில் உள்ளனர். முருகம்மாள் நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை.கோவிந்தசாமி புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார்

பெண்ணாடம்-காணாமல் போன மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், கீழப்புது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 70. விவசாயி. இவரது மனைவி முருகம்மாள், 60. இவர்களுக்கு இரண்டு மகன்கள். சிங்கப்பூரில் உள்ளனர். முருகம்மாள் நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை.கோவிந்தசாமி புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள கோவிந்தசாமிக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் நேற்றிரவு 11:00 மணியளவில் துர்நாற்றம் வீசியது.தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். முருகம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X