பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல்: ஒரு மனு கூட தாக்கல் இல்லை

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அன்னூர் : மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், முதல் நாளான நேற்று, ஒரு மனு கூட தாக்கல் ஆகவில்லை.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் மூன்றில், மாவட்ட கவுன்சிலராக இருந்த அமுல் கந்தசாமி, வால்பாறை எம்.எல்.ஏ., ஆனதால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்
 தேர்தல்: ஒரு மனு கூட தாக்கல் இல்லை

அன்னூர் : மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், முதல் நாளான நேற்று, ஒரு மனு கூட தாக்கல் ஆகவில்லை.

கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் மூன்றில், மாவட்ட கவுன்சிலராக இருந்த அமுல் கந்தசாமி, வால்பாறை எம்.எல்.ஏ., ஆனதால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார், உதவித் தேர்தல் அலுவலராக உதவி திட்ட அலுவலர் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.நேற்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சுயேச்சை ஒருவர் விண்ணப்ப படிவத்தை வாங்கி சென்றார். ஊராட்சி செயலாளர்களுக்கு, நடத்திய கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் பேசுகையில், "தேர்தல் நடப்பது குறித்து ஊராட்சியில் வீதிவீதியாக தண்டோரா போட்டு தெரிவிக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பை, ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒட்ட வேண்டும். பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், சின்னங்களை அகற்ற வேண்டும். கட்சித் தலைவர்களின் சிலைகளை துணி போட்டு மறைக்க வேண்டும். வரும் 9ம் தேதி தேர்தல் என்பதையும், போட்டியிட விரும்புவோர் வருகிற 22ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்பதையும் அனைவருக்கும் தெரியும்படி விளம்பரப்படுத்த வேண்டும். ஊராட்சி அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது" என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
16-செப்-202118:17:34 IST Report Abuse
T.Senthilsigamani இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் ,மக்கள் திருமண விசேஷங்களில் பிசியாகி விட்டனர் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X