பொது செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை பா.ஜ., தலைவரிடம் வீரவன்னியராஜா கோரிக்கை

Added : செப் 16, 2021
Share
Advertisement
நெய்வேலி-என்.எல்.சி., நிறுவன வளர்ச்சிக்கு வீடு, நிலங்களை கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ., தலைவரிடம் வீரவன்னிய ராஜா கோரிக்கை மனு வழங்கினார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சந்தித்த, நெய்வேலி பா.ஜ., பிரமுகரும் பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளருமான வீர வன்னிய ராஜா வழங்கிய கோரிக்கை

நெய்வேலி-என்.எல்.சி., நிறுவன வளர்ச்சிக்கு வீடு, நிலங்களை கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ., தலைவரிடம் வீரவன்னிய ராஜா கோரிக்கை மனு வழங்கினார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சந்தித்த, நெய்வேலி பா.ஜ., பிரமுகரும் பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளருமான வீர வன்னிய ராஜா வழங்கிய கோரிக்கை மனுவின் விபரம்:கடலுார் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., இந்தியா நிறுவன விரிவாக்க பணிகளுக்கு ஏராளமான விவசாயிகள் தங்கள் வீடு, நிலங்களை வழங்கியுள்ளனர். 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களை வழங்கியுள்ள விவசாயிகளுக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கவில்லை.மேலும் வீடு மற்றும் நிலம் கொடுத்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தர வேலை வழங்குவதில்லை. என்.எல்.சி., க்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நேரடியாக நிரந்தர வேலை வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு இடங்களில் மனைப்பட்டா அவரவர் பெயரில் வழங்கவேண்டும். என்.எல்.சி.,க்கு வீடு, நிலங்ளை வழங்கிய கிராமங்களை என்.எல்.சி., இந்தியா நிறுவனம் தத்தெடுத்து அனைத்து கிராமங்களுக்கும் தரமான சாலை வசதி , குடிநீர், மருத்துவம், கல்வி போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் செய்து தரவேண்டும். மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். மேலும் முன்றாவது சுரங்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் சூழலில் பாதிக்கப்படுகின்ற கிராம மக்களை தாங்கள் நேரில் வந்து பார்வையிட்டு, அவர்களின் குறை தீர்க்க வேண்டும்.நிலம் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைக்கு தங்களது தலைமையில் ஒரு குழு அமைத்து என்.எல்.சி., நிறுவனம் மற்றும் கடலுார் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. சந்திப்பின் போது பா.ஜ., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X